பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்திருப்பவர்கள் மட்டுமே 7.5 சதவீத சிறப்பு உள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில், அரசு பள்ளி மாணவர்கள் யாரும் விடுபடவில்லை என்றும், விடுப்பட்ட மாணவர்கள் முறையிட்டால் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.