கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த மத்திய அரசின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும், அந்த விதிகளின் அடிப்படையில், மாவட்ட அளவில் குழுவை அமைக்க அந்தந்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31க்கு முந்தைய கொரோனா மரணங்கள் குறித்து ஆய்வு செய்து, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.