கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரின் மனைவி பெயரில் மலேசியாவில், 551 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி 600 கோடி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் உட்பட 7 பேர் கைதாகினர். இந்த நிலையில், எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்த போது, வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது .
ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷின் மனைவி துபாய் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதும், அவர் பெயரில் மலேசியாவில், 551 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, அகிலாண்டத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.