ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாகச் செவ்வாயன்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் சில அதிகாரிகள் முதற்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்றும் மற்றும் சிலர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை திறக்கலாம் என்றும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தெரிவித்த அனைத்து கருத்துக்களும் தொகுக்கப்பட்டு அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சரே எடுப்பார் எனத் தெரிவித்தார்.