வரும் 17ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் வரும் 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி இருப்பு குறைவாக 17 லட்சம் டோசுகள் மட்டுமே இருப்பதாலும், வெள்ளிக்கிழமை என்பதாலும், மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் டோஸ்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். இந்த வாரமும் 20லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.