வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களில், வணிக வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடரும் என பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாநகராட்சி சார்பில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மதுரை கண்ணனேந்தல் பகுதியில் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வணிக நிறுவனங்கள் அரசிற்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.