கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் மீன்களை பிடிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
அணைகரைகோட்டாலம் கிராமத்தில் உள்ள மணிமுக்தா அணையில் நீர் வற்றியதால் மீன்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் தங்களால் இயன்றவரை மீன்களை பிடித்துக்கொண்டு மீன் பிடிப்பதை நிறுத்திக்கொண்டனர்.
மேலும் இந்த தகவலை அறிந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் இன்று அதிகாலை நேரத்தில் மணிமுக்தா அணையில் மீன்களை பிடிக்க குவிந்ததால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.