தமிழகத்தில் இருந்து 2 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் டாக்டர். கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்.பி.க்களாக இருந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜினாமா செய்ததால் உருவான காலியிடங்களுக்கு அக்டோபர் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், திமுக மருத்துவர் அணி செயலாளரான டாக்டர். கனிமொழி என்.வி.என்.சோமு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் போட்டியிடுவார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவிற்கு சட்டப்பேரவையில் அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் இருவரும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.