மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 15 வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞருக்கு அதிநவீன மூளை கதிரியக்க சிகிச்சை செய்து வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூளையில் வாஸ்குலர் குறைபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த சிவா என்ற இளைஞருக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை முறையான ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.