ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் உருவாக்கும்போது, ஒன்றேகால் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் ஏன் முடியாது என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.