கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள், தகுதி வாய்ந்த நபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டினார்.
நகைக் கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக, கடந்த ஒரு மாத காலமாக விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவரமான வழிமுறைகளை கூட்டுறவுத் துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். நகைக் கடன் தள்ளுபடிக்காக அரசுக்கு ஏற்படும் செலவு, 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்றும் முதலமைச்சர் கூறினார்.