வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் 15 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடக்க இருப்பதாக சைல்டு லைனிற்கு கிடைத்த தகவலை அடுத்து சமூக நலத்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது வேலூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் பள்ளி படிக்கும் சிறுமிகளுக்கு நடைபெற இருந்த 3 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 சிறார் திருமணங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சிறார் திருமணங்களும் கடந்த மூன்று நாட்களில் தடுத்து நிறுத்தப்பட்டன