அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்த மகாகவி பாரதியார், இன்றும் தேவைப்படுகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற பாரதியாரின் நூற்றாண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், பாரதியின் பாடல் வரிகள் அடங்கிய இசைப்பேழையை வெளியிட்டார்.
அவருடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வாலும் பங்கேற்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பாரதியின் புகழும், பாடலும் ஒருபோதும் மறையாது என நினைவுகூர்ந்தார்.
முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் தமிழக அரசோ, தனியார் அமைப்போ கோரிக்கை வைத்தால் பாரதியார் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும், பாரதியாரின் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் குறிப்பிட்டார்.