தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 2 கோடியே 71 லட்சம் ரூபாய் கையாடல் செய்த, தமிழகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா கால சலுகையின்போது முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவின் காண்டிவிலி பகுதியில் இயங்கும் மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி சந்தன் குமார் சின்ஹா, இதில் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
இவருடன், தமிழகத்தின் கோவை மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி வந்த உத்தம் தகாரே மற்றும் விஜய் ஜார்பே ஆகியோரும் பணத்தை கையாடல் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.