வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை இரண்டு மணி நேரம் போராடி வனத்துறையினர் பிடித்தனர்.
வளத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக அப்பகுதி மக்கள் பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து பல்லலக்குப்பம் காப்புக்காட்டில் விட்டுவிட்டனர்.