தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, சத்தீஸ்கர் நோக்கி நகர்ந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.