இம்மானுவேல் சேகரனின் 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி, சிறுபான்மையினர் பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.