நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மது போதையில் தாயை அடித்த தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டான்.
கண்ணநல்லூர் தாமரைக்குளத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் நேற்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மாடத்தியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் தாயை அடிப்பதை கண்ட மனநிலை பாதிக்கப்பட்ட மகன் கணேசன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தந்தையின் தலையில் வெட்டியுள்ளான்.
இதில் சமுத்திரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.