தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் அரசின் உத்தரவை மீறி வெற்றி வினாயகர் ஊர்வலம் நடந்தது. புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிலைகள் புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் இந்து முன்னணி சார்பில் 25 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ள வல்லப கணபதி ஆலயத்தில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி உயர விநாயகர் சிலை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
திருவெறும்பூர் அடுத்த போலீஸ் காலனியில் அமைந்துள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் மூஷிக வாகனத்தில் உலா வந்து விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுச்சேரி யூனியன் காரைக்காலில் யாழ்முறிநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் உற்சவர் விநாயகருக்கு மகா தீபாராதனையும்,வீதியுலாவும் நடைபெற்றது.