கரூரில் தடையை மீறி நள்ளிரவில் விநாயகர் சிலை வைக்க முயன்ற, இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வ.உ.சி தெருவில், இந்து முன்னணி சார்பில் நான்கரை அடி உயர விநாயகர் சிலை வைக்க, நள்ளிரவில் மினி சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி சிலையை பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
இதனால், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.