திருவாரூர் மாவட்டம் குடவாசலில் சாமியார் வார்த்தையை நம்பி, பொது குளத்தை மூட முயன்ற சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
விலாசம் கிராமத்தில் உள்ள பத்தினி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், யாக சாலை அமைக்க கோயிலுக்கு பார்வையிட வந்த சாமியார் ஒருவர் கோயிலுக்கு பின்புறம் குளம் இருந்தால் ஊருக்குக் கெடுதல் எனவும் கும்பாபிஷேம் செய்வதற்கு முன் அந்த குளத்தை மூட வேண்டும் எனவும் குறி சொன்னதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக கோயிலில் திருப்பணிகள் மேற்கொண்ட தொழிலதிபர் சவுந்தரராஜன், கோவிலுக்கு எதிர்புறம் உள்ள நிலத்தில் இருந்த மண்ணை வெட்டி குளத்தை மூடும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் குளத்தை மூடும் பணியை தடுத்து நிறுத்தினர்.