பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் படி சசிகலாவுக்குச் சொந்தமான மேலும் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பையனூர் பங்களா உட்பட 49 ஏக்கர் இடத்தை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
2019-ம்ஆண்டு சசிகலா தொடர்புடைய 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், கடந்த ஆண்டு, சென்னை போயஸ் கார்டன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 300 கோடி ரூபாய் சொத்துக்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள பங்களாவுடன் கூடிய 49 ஏக்கர் இடத்தை வருமான வரித்துறை தற்போது முடக்கியுள்ளது. பினாமி சட்டத்தின் கீழ் இது வரை சசிகலா தொடர்புடைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.