பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட 7 பேரில், நிதி நிறுவன அலுவலக பணியாளர் உட்பட 2 பேர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர்.
அதன் விசாரணையில், ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி, அவர்களுக்கு குவைத், மலேசியா உள்ளிட்ட வேறு நாடுகளில் நிறுவனங்கள் உள்ளனவா என்பதை கண்டறிய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.