தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் என்கிற தன்னாட்சி கொண்ட புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமுன்வரைவு நடப்புச் சட்டமன்றத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக இறுதி செய்வதற்கு சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் மேலும் 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.