பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் ஐந்து பேராவது வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது நீதிபதிகள், கொரானா பரவல் காரணமாக பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு பிறப்பித்துள்ள இந்த தடை உத்தரவில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.