அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னதாகவே, வரும் ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சத்துணவு பணியாளர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.