செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.3 கோடி முடக்கத்தால் அன்றாட செலவுகளுக்கே அல்லல்படுகின்றேன்..! 'ஆடி'னரி கார் மதன் மனைவி..!

Sep 07, 2021 09:31:10 AM

சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள மூன்று கோடி ரூபாய் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பப்ஜி மதனின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பெண்களை இழிவுப்படுத்தி பேசி யூ ட்யூபில் பதிவிட்டதோடு ஏழைகளுக்கு உதவுவதாகக் கூறி கோடிகளை சுருட்டிய பப்ஜி மதன் மற்றும் உடந்தையாக இருந்த அவனது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரது வங்கிக் கணக்கில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவனது மனைவி கிருத்திகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கி கிளையில் உள்ள தனது கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், வங்கிக் கணக்கில் உள்ள மூன்றரை கோடி ரூபாய் பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் தரப்பில் கூறும் போது, ஊரடங்கு காலத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்வதாகக் கூறி 2,848 நபர்களிடம் இருந்து 2 கோடியே 89 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று அந்த பணத்தை அபிராமபுரம் ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் உள்ள கிருத்திகாவின் வங்கி கணக்கிற்கு மாற்றிய மதன், அந்த பணத்தை தங்களது சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தி வந்ததையும், பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வங்கிக் கணக்கில் உள்ளது மோசடிப் பணம் என்பதால், அதனை ஏமாந்தவர்களிடம் திருப்பிக் கொடுப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், எனவே இந்த பணத்தை மதனின் மனைவியிடம் திருப்பி கொடுக்கக் கூடாது என்றும் காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ ட்யூப் மூலம் அவர்களுக்கு கிடைத்த வருவாய் 31 லட்சம் ரூபாய் மட்டுமே எனவும், மீதமுள்ள தொகை மோசடிப் பணம் எனவும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பப்ஜி மதனின் மோசடி குறித்த ஆதாரங்களை வருகிற 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றாட செலவுகளுக்கு அல்லல்படுவது போல நடித்து மோசடி பணத்தை திரும்பப் பெற்று விட மதனின் மனைவி பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வரும் நிலையில், போலீசார் அந்த பணத்தை ஏமாந்தவர்களுக்கு திருப்பி கொடுப்பதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement
மழை நீர் கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டடினால் அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி அறிவுறுத்தல்
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்... ஊராட்சி மன்றத் தலைவியிடம் முறையிட்ட பொதுமக்கள்
கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்
துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர் கைது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாள்

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement