மதுரையில் 62 லட்சம் ரூபாய் அளவுக்கு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் 8 பேரை கைது செய்தனர்.
தடை செய்யப்பட்டு புழக்கத்தில் இல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாகக் கூறி மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் பணத்தை பறித்துவிட்டு தப்பி செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரு கார்களில் வந்த ஆசாமிகள் வங்கிக்கு பணம் செலுத்தப் போவதாக கூறியுள்ளனர்.
போலீசார் அந்த இரு கார்களையும் சோதனை செய்தபோது செல்லாத ரூ.1000 பழைய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.