கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் நிபா வைரஸ் குறித்து தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறினார்.
புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 75 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதனைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், மாணவர்கள் சிலருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், அதுதொடர்பாக கண்காணித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.