பள்ளி கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய் தொற்று கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோய் தொற்று கண்டறியப்பட்ட சில பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளதாக கூறினார்.
தடுப்பூசிக்கு கட்டுப்படாதது என சொல்லப்படும் சி .1.2 வகை கொரனோ வைரஸ் உலக அளவில் 9 நாடுகளில் பரவிய நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.