கீழடியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்பட 3 இடங்களை அகழாய்வு நடத்த தேர்வு செய்துள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கற்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளது என்றார்.