கும்பகோணத்தில் “நோ பார்க்கிங்கில்” தனது காரை நிறுத்திய கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், காரின் சக்கரத்தை பூட்டிய அதிகாரியை ஒருமையில் ஆபாசமாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவிடைமருதூர் அடுத்த பவுன்ரீகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவர், கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை ஆயிகுளம் பகுதியில் நோ பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளார்.
திரும்பி வந்து பார்த்தபோது, அவரது காரின் சக்கரத்தில் பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், காரை லாக் செய்த போக்குவரத்து ஆய்வாளர் சரவணனை ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சம்பவ இடத்தில் விசாரிப்பதற்காக வந்த போக்குவரத்துக் காவலரின் பைக் சாவியை சுரேஷ் பறித்து எறிந்ததாகவும் கூறப்படுகிறது.