ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் தொழிற்சாலை கழிவுகள், சாயக்கழிவுகள் கலப்பது, குடிநீரில் விஷம் கலப்பதற்கு சமம் என்று சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன், கோவை வெள்ளலூரில் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கை அகற்றினால் அந்த இடம் 5000 கோடி ருபாய்க்கு சமமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் குப்பைகளை போட குப்பைத்தொட்டிகளை தேடும் சூழலில், தமிழ்நாட்டில் குப்பைகளை சாலைகளில் வீசிச் செல்வதை பார்க்க முடிவதாகவும், குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் நாம் செய்யும் அநீதி எனவும் அமைச்சர் கூறினார்.