செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கு.... காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Sep 03, 2021 05:45:29 PM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரும் மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க, காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு வழக்கில் 8 பேருக்கு எதிராக வழக்குப் பதிந்து நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதித்த நீதிமன்றம், மற்றவர்களை விசாரிக்க அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில் நீலகிரி நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசி ஆகியோருக்குத் தான் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ளதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், முக்கியக் குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதலாகச் சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாகக் கூறவில்லை என்றும், இதுதொடர்பாக மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கக் காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.


Advertisement
மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளிவைத்த பஞ்சாயத்தார் மீது எப்.ஐ.ஆர்
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து கடலில் கலக்கும் நீர்
பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரி கைது
போலி மருத்துவரால் விபரீதம் குழந்தை பிறந்த சில நாட்களில் உயிரிழந்த பெண்
ஸ்ட்ராபெரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் ... ஒரு கிலோ ரூ.300 - ரூ.350 வரை விற்பனை
தமிழக மின்வாரியத்திற்கும், அதானி குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை - செந்தில் பாலாஜி
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர்களை நியமிக்க முடிவு
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25ஆண்டுகள் ஆன நிலையில் வெள்ளிவிழா
கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டில் பிரசவம் பார்த்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இயல்பு நிலைக்கு திரும்பும் திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை

Advertisement
Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்


Advertisement