முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு மேல் 73 விழுக்காடு அளவுக்குச் சொத்துச் சேர்த்துள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்துள்ளதாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதியக் கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்தனர். இதையடுத்து மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
வருமானத்துக்கு மேல் 73 விழுக்காடு அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தொடக்க நிலை விசாரணையை வைத்து வழக்கைக் கைவிட முடிவெடுக்க முடியாது என்றும், தற்போது மேல் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி சார்பில் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8ஆம் நாளுக்குத் தள்ளிவைத்தார்.