கொடநாடு எஸ்டேட் கொள்ளை, கொலை வழக்கு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்டேட்டின் மேலாளர் நடராஜனிடம் எஸ்.பி. முனிலையில் விசாரணை நடைபெற்றது.
வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில், தனக்கு சம்மன் அனுப்பப்படவில்லை என்று கூறி, மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை. புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் மற்றும் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் ஆஜரான மேலாளர் நடராஜனிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வழக்கு தொடர்பாக விசாரிக்க, எஸ்.பி ஆசிஷ் ராவத் தலைமையில் 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.