அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில் தமிழகத்திலுள்ள 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கடற்கரை பகுதிகளில் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து, தூய்மையான சுற்றுச்சூழலை கொண்ட கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மெரினா கடற்கரை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், நாகை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.