தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் வாகன ஆய்வாளரான கலைச்செல்வி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 2 வாகனங்களுக்கு ஆர்.சி புக் வழங்க 4500 ரூபாய் இடைத்தரகர் மூலம் லஞ்சம் கேட்பதாக வாகன விற்பனை நிறுவன மேலாளர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தனர்.
போலீசாரின் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை இடைத்தரகரிடம் அவர்கள் வழங்கினர். அதனை அவர் கலைச்செல்வியிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கலைச்செல்வியை கையும் களவுமாகப் பிடித்தனர்.