கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன் கத்தியை காட்டி 2 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஜிபூர் ரகுமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பிரபாகரன் என்பவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் கைதான ராமநாதபுரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து முஜிபுர் ரகுமானை குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவிட்டார்.