கொடநாடு கொள்ளை, கொலை வழக்கின் விசாரணை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சிகளாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் மேலாளர், தடயவியல் நிபுணர், மின்வாரிய அதிகாரி மூவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சாட்சிகள் யாரும் ஆஜராகாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சயானும், வாளையாறு மனோஜும் ஆஜராகினர்.
அப்போது, கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில், மேல் விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை சுட்டிக்காட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, விசாரணையை அக்டோபர் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.