நெல்லை மாவட்டம் உருவாகி 231 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில் 231 வது ஆண்டை கொண்டாடும் விதமாக வண்ணாரப்பேட்டையில் ”நம்ம நெல்லை” என்ற செல்ஃபி பாய்ண்டை மாநகர காவல் துணை ஆணையாளர் திறந்து வைத்தார். தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கே புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.