பாஸ்போர்ட் அதிகாரிகளால் முடக்கப்பட்டிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி காவல் துறையால் 2017 ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவழக்கு பற்றி பாஸ்போர்ட்டில் குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகக் கூறி, பிரேமலதாவின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.
குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்றும், நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் உறுதியளித்ததால், பிரேமலதாவிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.