அரசு கட்டிடம் மட்டுமல்லாமல் தனியார் கட்டிடங்களும் ஆய்வுக்குட்படுத்தப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மானிய கோரிகையின்போது பேசிய திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன், முகலிவாக்கம் கட்டிட விபத்தை சுட்டிக்காட்டி கட்டிடங்கள் கட்டும்போது கட்டுமான நிலை வாரியாக அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு, தனியார் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும்போதே சி எம் டி ஏ அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினரும் ஆய்வு செய்வது செயல்படுத்தப்படும் என்றார்.
சி எம் டி ஏ எல்லைகளை விரிவுபடுத்தி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்றும் திருமழிசை துணைக்கோள் நகரத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.