கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிடத்தொழிலாளி மன உளைச்சலால் நாக்கை அறுத்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில், துண்டான நாக்கை ஒட்ட வைக்க அதை கவரில் வைத்து மனைவியும், மகளும் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர்.
மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்த் நகரில் வசித்து வரும் முருகேசன், சிறிது மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்த முருகேசன், தனது நாக்கை கத்தியால் வெட்டிக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதிர்ச்சியடைந்த மனைவியும், மகளும் துண்டான நாக்கை கவரில் எடுத்து கொண்டு முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் துண்டான நாக்கில் இரத்த ஓட்டம் இல்லாததால் மீண்டும் இணைக்க முடியாது எனவும், தெளிவான உச்சரிப்பு இல்லாமல் ஓரளவுக்கு மட்டுமே முருகேசனால் இனிமேல் பேச இயலும் என தெரிவித்தனர்.