தமிழகத்தில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலாச்சார மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என கல்லூரி முதல்வர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கல்லூரிகளில் கலாசார, பொழுதுபோக்கு மற்றும் கல்வி சார்ந்த கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் உத்தரவிட்டுள்ளார்.