தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, அரசு பணியில் சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என செவிலியர் பயிற்சி மாணவிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு செவிலியர் பயிற்சி மாணவிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கொரோனா பணியில் ஈடுபடும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.