விதிகளை மீறி கனிம வளங்கள் எடுக்கப்படுவதை தடுக்க, ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த திட்டமானது 25கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தாமல் குவாரி பகுதியில் மலைபோல குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவுகளை, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதிக செறிவூட்டப்பட்ட கிராபைட் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித்தும், ஜிப்சம் கனிம இருப்பு பகுதிகளை கண்டறிவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். மேலும், எம்.சாண்ட் மணலின் தயாரிப்பு, தரம், விலை ஆகியவற்றை முறைப்படுத்த மாநில அளவில் புதிய கொள்கை உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.