பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள், அவர்களிடமே இருக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், 1 லட்சத்து 47 ஆயிரத்து 296 ஏக்கர் நிலம் பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலமாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் அவர்களிடமே உள்ளதா அல்லது தனியார் அமைப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த அறிக்கையின் படி ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறினார்.