நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருவோர் இரு தவணை தடுப்பூசி போட்டுகொண்ட சான்று அல்லது RTPCR பரிசோதனை சான்று கட்டாயம் காண்பிக்க வேண்டும் என கூறினார்.
கல்லூரிக்கு வரும் மாணவர்களும் தடுப்பூசி செலுத்திய சான்று அல்லது RTPCR பரிசோதனை சான்று காண்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.