மதுரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில், கட்டுமானத்தின் தரம் குறித்து திருச்சி என்.ஐ.டி. குழு ஆய்வு செய்தது.
மதுரை நத்தம் சாலையில், பாண்டியன் ஓட்டல் சந்திப்பு தொடங்கி செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 268 ராட்சத தூண்களுடன் கூடிய பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு வந்தது.
இரண்டு தூண்களை இணைக்கும் வகையில் கிடைமட்ட கான்கிரீட் மேல் தளத்தை ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பொருத்த முயன்ற போது, அது சரிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்தது. விபத்திற்கு காரணமாக கூறப்படும் ஹைட்ராலிக் ஜாக்கியின் தன்மை குறித்தும் அந்த குழு ஆய்வு செய்தது.